Karthi, Jyothika film
Karthi, Jyothika film

Karthi Jyothika film – 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாபநாசம், 36 வயதினிலே புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

சர்ச்சைக்குரிய இயக்குனரின் படத்தில் சிம்பு – அதுவும் இப்படியொரு படமா?

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தற்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் முதல்முறை அண்ணியுடன் இணைந்து நடிக்கிறேன் என்றும் அதில் கார்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு படத்தில் நடிக்கும் சங்கீதா – அதுவும் யார் படம் தெரியுமா?

இப்படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களா நடிப்பதாகவும் ஒரு சம்பவத்தில் இருந்து குடும்பமாக இவர்கள் எப்படி ஒன்றிணைந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இப்படத்தில் சத்யராஜ் இவர்களது தந்தையாக நடிக்கிறார்.