விருமன் பட கெட்டப்பில் நடிகர் கார்த்தியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karthi in Viruman Getup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் இளைய மகனான இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விருமன் பட கெட்டப்பில் நடிகர் கார்த்தி.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!!

மேலும் கார்த்தி தற்போது பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்திக் இந்த படத்தில் பல கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.