Karthi Tweet

Actor Karthi Tweet : நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார் டீவீட்டால் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவுகிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் கார்த்தி. இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி இருந்தும் இறுதியாக ரகுல் ப்ரீத் சிங்குடன் சேர்ந்து நடித்திருந்த தேவ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து கார்த்திக்கு ஒரு சிறிய சறுக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது கார்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் தறி என்ற பெயரில் புதிய சீரியல் தொடங்க உள்ளது.

அத்தனை சீரியல் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நடிகை – தமிழகத்தில் இவர் தான் முதலிடம்!

இந்த சீரியல் டீமிற்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் கார்த்தியும் இந்த சீரியலில் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இது குறித்து அவர் எந்தவொரு தகவலையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.