வயதான தோற்றத்தில் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார் நடிகர் கார்த்தி.

Karthi in Sardhar Getup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக விருமன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா தயாரிக்க கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

வயதான தோற்றத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய கார்த்தி.. வைரலாகும் ஷாக் புகைப்படம்

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி கைதி 2 மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடிக்கிறார். சர்தார் திரைப்படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

வயதான தோற்றத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய கார்த்தி.. வைரலாகும் ஷாக் புகைப்படம்

இளமையான வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வயது முதிர்ந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.