நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த கேள்விக்கு நடிகர் கார்த்தி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

ணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தில் வந்திய தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்திக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நகைச்சுவையுடன் பதில் அளித்திருக்கும் வந்தியத்தேவனின் (கார்த்தி) பதிவு வைரலாகி வருகிறது.

தஞ்சைக்கு அழைத்த ஆதித்த கரிகாலன்… நகைச்சுவையாக பதில் அளித்த வந்தியத்தேவனின் ட்விட்டர் பதிவு வைரல்!!.

அதாவது நடிகர் விக்ரம், சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண் மொழியையும் இழுத்து வா! என பதிவிட்டிருக்கிறார்.

தஞ்சைக்கு அழைத்த ஆதித்த கரிகாலன்… நகைச்சுவையாக பதில் அளித்த வந்தியத்தேவனின் ட்விட்டர் பதிவு வைரல்!!.

அதற்கு வந்தியத்தேவனான கார்த்தி, இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற கலைப்பே இன்னும் போகவில்லை. As Iam suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me. என நகைச்சுவையுடன் பதில் அளித்திருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.