Karthi Movie

Karthi Movie : கார்த்திக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

சின்னத்தம்பி சீரியல் நாயகிக்கு 2-வது திருமணம் – மாப்பிள்ளை கூட இவர் தான்.!

இவர் தற்போது மாநகரம் பட இயக்குனர் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

அதன் பின்னர் பாபநாசம் படத்தின் இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கத்தில் உருவாக உள்ள ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்புவோட திரும்பவும் சேர்ந்துட்டேன் – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.!

இந்த படத்தில் ஹீரோயினுக்கு நிகரான முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான தேவ் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.