Karthi About Ponniyin Selvan

பொன்னின் செல்வன் திரைப்படம் எப்போது ரிலீஸ் அதன் படப்பிடிப்புகள் எவ்வளவு முடிவடைந்துள்ளது என்ற அப்டேட்டை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

Karthi About Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது தன் வாழ்நாள் கனவு படமான பொன்னயின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஜெயம் ரவி விக்ரம் ஜெயராம் ஐஸ்வர்யா ராய் கீர்த்தி சுரேஷ் திரிஷா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

படத்தில் படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரானா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்புகள் எவ்வளவு முடிவடைந்துள்ளது என்பது குறித்த அப்டேட்டை நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் 70% முடிவடைந்து உள்ளதாகவும் இந்த படத்தை வரும் 2022 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 60 வருடகால முயற்சிகளுக்குப் பிறகு தற்போது இந்த படம் உருவாகி வருவதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.