இளவரசரே என்னுடைய பணியும் முடிந்துவிட்டது என ஜெயம் ரவிக்கு ட்வீட் போட்டுள்ளார் பிரபல நடிகர்.

Karthi About Ponniyin Selvan Shooting : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணி ரத்தினம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

இளவரசரே என்னுடைய பணியும் முடிந்தது.. பொன்னியின் செல்வன் பற்றி ஜெயம் ரவிக்கு பிரபல நடிகர் போட்ட ட்வீட் ‌‌

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். முதலில் ஜெயம் ரவி இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்தார். இதனையடுத்து தற்போது நடிகர் கார்த்தி தன்னுடைய சூட்டிங்கை முடித்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில் இளவரசி திரிஷா நீங்கள் இட்ட கட்டளை நிறைவேற்றப்பட்டது. இளவரசரை ஜெயம் ரவி என்னுடைய பணி முடிவடைந்தது என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

வெகு விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.