Karnan Teaser Record in YouTube

கர்ணன் படத்தின் டீசர் படைத்த சாதனை தனுஷ் ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Karnan Teaser Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டர் பாடல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த டீசர் தற்போது யூடியூபில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

பதினோரு மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் ஐந்து மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.