Karnan

நடிகர் தனுஷின் திரைப்படத்திலேயே கர்ணன் திரைப்படத்தின் வசூல் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

Karnan Record in Dhanush Carrier : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் 10 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே கர்ணன் திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படமாக இடம் பிடித்தது.

மேலும் தற்போது வரை படம் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தனுஷின் திரைப்பயணத்தில் கர்ணன் திரைப்படம் தான் இதுவரை அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.