பக்கத்துல இருந்த Tray-யை தூக்கி அடிக்கணும் போல இருந்தது - Karnan Public Review Day 5

Dhanush Watched Karnan in America : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி கர்ணன் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.

மூன்று நாள் முடிவில் ரூபாய் 25 கோடி வரை வசூல் செய்தது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை பெற்று அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது.

ஆனால் தனுஷ் தற்போது இந்தியாவில் இல்லை என்பதால் அவரால் கர்ணன் திரைப்படத்தை இந்தியாவில் பார்க்க முடியவில்லை. தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு மகன்களுடன் இணைந்து லாஸ் ஏஞ்சல்ஸ் திரையரங்கில் படத்தினைப் பார்த்து ரசித்துள்ளார்.

அமெரிக்காவிலும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரையரங்கம் கர்ணன் படத்தில் சோ நிறைந்து காணப்படுவதாக தனுஷ் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் தெரிவித்துள்ளார். தனுஷ் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக தாணு தெரிவித்துள்ளார்.

இந்த ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புகள் முடிய ஓர் ஆண்டுகள் ஆகும். ஆனால் தனுஷ் இன்னும் 40 நாளில் தமிழகம் திரும்பி விடுவார் எனவும் தெரிய வந்துள்ளது.