தனுஷின் கர்ணன் திரைப்படம் OTT-யில் வெளியாகும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Karnan OTT Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இந்த படத்தினை பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கிய இந்த மாரி செல்வராஜ் இயக்கினார். கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தை தயாரித்திருந்தார்.

Karnan Telungu Remake Update

ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மேல் கர்ணன் திரைப்படம் ரீமேக் ஆக உள்ளது. சாய் சீனிவாஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கர்ணன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வரும் மே 9-ஆம் தேதி இத்திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.