Karnan Movie Title Secrets

முதல் முதலாக கர்ணன் திரைப்படத்திற்கு என்ன தலைப்பு வைத்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Karnan Movie Title Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப் படம் ரிலீசுக்கு முன்னரும் பின்னரும் என பல்வேறு பஞ்சாயத்துகளை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

படம் வெளியான மறுநாளே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் படம் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த படத்தின் தலைப்பிற்கும் பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில் தற்போது படத்தின் கலை இயக்குனர் அளித்த பேட்டியில் முதன்முதலாக கர்ணன் திரைப்படத்திற்கு என்ன டைட்டில் வைக்கப்பட இருந்தது என்பது குறித்து கூறியுள்ளார்.

அதாவது படத்திற்கு பாண்டிய ராஜாக்கள் என்று டைட்டில் வைக்கலாம் என்றுதான் படக்குழு ஆலோசனையில் இருந்ததாம். அதன் பிறகுதான் கர்ணன் என்ன டைட்டிலை மாற்றியதாக கலை இயக்குனர் தெரிவித்துள்ளார். கர்ணன் என்ற தலைப்பிற்கு பெரும் சர்ச்சையில் இந்த நிலையில் பாண்டிய ராஜாக்கள் என டைட்டில் வைத்திருந்தால் அது இன்னும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.