Karnan Movie Dubbing Update

கர்ணன் படம் பற்றிய சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

Karnan Movie Dubbing Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் டப்பிங் ஒரளவிற்கு முழுமையடைந்து விட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.