Karnan in Malayalam Rights Bagged By Mohanlal

கர்ணன் படத்தின் உரிமையை ஸ்டாரான நடிகர் ஒருவர் கைப்பற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Karnan in Malayalam Rights Bagged By Mohanlal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் மலையாள உரிமையை மோகன்லால் கைப்பற்றியுள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் பட குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.