நடுக்கடலில் கர்ணன் படத்தில் கேட் கட்டவுட் வைத்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Karnan Cutout in Sea : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இதை திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்திருந்தது. இருப்பினும் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் வைத்த கட்-அவுட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.