Karnan Blockbuster

அனைத்து சென்டர்களிலும் பிளாக்பஸ்டர் என கர்ணன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Karnan Blockbuster : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படத்தின் இசை மற்றும் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் முதல் நாளில் தனுஷ் திரைப்படத்திலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக கர்ணன் இடம்பிடித்துள்ளது. மூன்று நாள் முடிவில் இப்படம் ரூபாய் 23 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து அனைத்து சென்டர் மக்களையும் கவர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது. இதனால் ட்விட்டர் பக்கத்தில் #KarnanBlockBustrer என்ற ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்ட்டிங்கில் இடம் பிடித்தது.