Karnan 3rd Single Controversy

ரிலீஸுக்கு முன்னரே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது கர்ணன் படத்தில் மூன்றாவது சிங்கிள் ட்ராக் அறிவிப்பு.

Karnan 3rd Single Controversy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் செல்வராகவன் உடன்பிறந்த சகோதரரான இவர் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் தனுஷ் கர்ணன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை பரியேறும் பெருமாள் படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தன. இரண்டே பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது சிங்கிள் ட்ராக்காக திரௌபதியின் முத்தம் என்ற பெயரில் பாடல் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் ஒருவர். இந்த பாடலின் தலைப்பு திரௌபதியை கடவுளாக வழிபடும் வன்னியர்களின் உணர்வை கொச்சைப்படுத்துவதாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை வன்னியர் இன மக்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருந்தால் அதனை நீக்கிவிடுங்கள் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

https://twitter.com/sankarpmk1984/status/1369294430709161992?s=19