Karakattakaran 2 :
Karakattakaran 2 : கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கங்கை அமரன் கூறியிருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் கிளாசிக் படங்களில் பெரிதும் பேசப்பட்ட படம் கரகாட்டக்காரன், கங்கை அமரன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
கே.ஜி.எஃப் படத்தில் நடிக்க இத்தனை ஆயிரம் பேர் போட்டியா – புகைப்படத்தை நீங்களே பாருங்க!
இந்த படமும் சரி, படத்தின் பாடல்களும் சரி இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்நிலையில் தற்போது கங்கை அமரன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பாணிகளில் இறங்கி உள்ளராம்.
முதல் பாகத்தில் நடித்த ராமராஜ், கனகா, கோவை சரளா, செந்தில், கவுண்டமணி என அனைவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
அதே சமயம் அதே டீம் மீண்டும் இணைந்தால் இன்றைய கால கட்டத்திற்கு வெற்றி கிட்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.