Kappaan

Kappan Song : கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள காப்பான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் தான் இப்படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான ரயில் சண்டைக் காட்சியை படக்குழு படமாக்கி முடித்தனர். இது ஒரு பக்கம் இருக்க இப்படத்தின் இசை பணிகளில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தன் பங்கிற்கு தீவிரமடைந்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி பிரபல பாடலாசிரியர் கபிலன் இப்படத்தில் ஒரு பாடல் எழுதியிருப்பதாகவும் இப்பாடலை பாடகி தராஹினி பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

KV Anand

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here