Kappan

Kappan Update : சூர்யா மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் காப்பான் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

விஜயை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகர் – என்ன இப்படி ஆகிடுச்சே.!

இந்த படத்தில் சூர்யாவுடன் பிரபல நடிகரான ஆர்யாவும் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லாலும் இணைந்து நடித்து வருகின்றனர். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஸா நடிக்கின்றார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் தற்போது பிரபல காமெடி நடிகரான மயில் சாமி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படம் – டைட்டிலுடன் வெளியான தகவல்.!

ஆனால் அவர் இந்த படத்தில் நெகடிவ் ரோலில் தான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

செலவராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK படம் ரிலீஸானதும் சிறிய இடைவெளியில் இப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.