Kappaan Movie : அஜித் பாணியில் காப்பான் படக்குழுவிற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க ஆர்யா, மோகன் லால், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
தற்போது சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே அஜித் தான் தன்னுடைய படக்குழுவிற்க்கு தன்னுடைய கையால் பிரியாணி சமைத்து கொடுப்பார். தற்போது அதே பாணியை சூரியாவும் பின்பற்றியுள்ளார்.
• Exclusive from Shooting spot @Suriya_offl Anna treated & he himself served Biriyani to the whole #Kaappaan team including all the set members & technicians… The way he respects his team, co-stars is just lovely ???? And his look #Suriya ❤❤#Kaappaan #NGK pic.twitter.com/iEqR1m4ugC
— Joe Vignesh (@JyothiVignesh) February 21, 2019