Kappaan Movie Release Date is Officially Announced - Here is the Update | Actor Suriya | Sayyeshaa | Arya | Mohan Lal | K V Anand
சூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளி போயுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Kappaan Movie Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க ஆர்யா, மோகன் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

ஆனால் இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி போவதாக அறிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.