காந்தாரா திரைப்படத்தின் வராஹா ரூபம் என்னும் பாடல் நீக்கப்பட்டுள்ளது.

கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூபாய் 350 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது இப்படம் நவம்பர் 24ஆம் தேதியான இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

காந்தாரா திரைப்படத்தின் பாடல் நீக்கம்!!… என்ன காரணம் தெரியுமா?? வைரலாகும் முக்கிய தகவல்!.

இந்நிலையில், காப்புரிமை பிரச்சனை காரணமாக காந்தாரா திரைப்படத்தில் இருந்து வராஹா ரூபம் என்னும் பாடல் நீக்கப்பட்டுள்ளது. தங்களுடைய நவரசம் பாடலில் இருந்து இசையை காப்பி அடித்து விட்டதாக பிரபல இசைக்குழு தாய்க்குடம் பிரிட்ஜ் தொடர்ந்து வழக்கில், காந்தாராவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படத்தில் அப்பாடல் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.