காந்தாரா திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள காந்தாரா!!… படக்குழு வெளியிட்ட மகிழ்ச்சி தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.!

ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூபாய் 400 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை கண்ட இப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள காந்தாரா!!… படக்குழு வெளியிட்ட மகிழ்ச்சி தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.!

அதாவது இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் 95 வது ஆஸ்கார் விருது பரிந்துரைக்கு ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா படத்தை சேர்க்க விண்ணப்பம் அனுப்பியுள்ளது. அதன்படி காந்தாரா திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதனை படகுழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.