Kanni Maadam Review
ஸ்ரீ ராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி, சாயா தேவி, முருகதாஸ், மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கன்னி மாடம்.

Kanni Maadam Movie Review :

படத்தின் கதைக்களம் :

பணக்கார வீட்டு பையனுக்கும் ஏழை வீட்டு பெண்ணுக்கும் காதல் மலர்ந்து கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளை கொண்டு எதார்த்தமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் கன்னி மாடம். ( படத்தின் சுவாரஷ்யம் கருதி கதையை மேலும் விவரிக்கவில்லை )

படத்தில் இடம் பெறும் மதம் மனிதனை மிருகமாக்கும் ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் என்ற வசனங்கள் எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கிறது.

மாஸா? கிளாஸா? பிளாப்பா? – மாஃபியா விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்துள்ளனர். திரையில் சிலரின் கதாபாத்திரங்கள் எரிச்சலடைய வைப்பது போல இருந்தாலும் அதன் பின்னணியில் இருக்கும் கதை நம்மை உருக வைக்கிறது.

தொழில் நுட்பம் :

இசை :

ஹரி சாயின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது, பாடல்கள் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

இனியன் ஜே ஹரிஷின் ஒளிப்பதிவு நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

எடிட்டிங் :

ரிஷால் ஜாய்னியின் எடிட்டிங் கச்சிதம்

இயக்கம் :

போஸ் வெங்கட் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நம்மை சிந்திக்க வைக்கும் வசனங்களுடன் கன்னி மாடம் என்ற படத்தை கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஒட்டு மொத்த நடிகர்களின் நடிப்பு
2. படத்தின் கதைக்களம்
3. வசனங்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. சில இடங்களில் ஏற்படும் தொய்வு

மொத்தத்தில் கன்னி மாடம் அன்பை போதிக்கும் ஒரு படம்.