Kanne Kalaimane Movie

Kanne Kalaimane : கண்ணே கலைமானே திரைப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கண்ணே கலைமானே.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது தமன்னா, கிராமம் நகரம் என இரண்டிலும் நடக்கும் பிரச்சனைகளை பற்றியும் விவசாயத்தையும் மண்ணையும் பற்றியும் பேசும் படமாக உருவாகி இருப்பதாக கூறியுள்ளார்.

அஜித், விஜய் கிட்ட கூட கேட்காததை உதயநிதியிடம் கேட்ட தமன்னா – ரசிகர்கள் ஷாக்.!

மேலும் உதயநிதி இப்படத்தில் விவசாயியாக நடித்திருப்பதாகவும் வடிவுக்கரசி அவர்கள் பேசும் போது கூறியிருந்தார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 22-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.