Kannana Kanne Song Record : Thala Ajith, Nayanthara, AJith, Siva, Viswasam, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
விஸ்வாசம் படம் புதியதொரு சாதனையை படைத்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kannana Kanne Song Record : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித். இறுதியாக இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

டி.இம்மான் இசையமைத்து இருந்தார். நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக அனிகா நடித்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மூன்றாவது போட்டியாளர் – அது இவர் தான்.!

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரை மகளை பெற்ற பல அப்பாக்களின் காலர் டியூனாக இருந்து வருகிறது.

தற்போது இப்பாடல் யூ ட்யூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதியதொரு சாதனையை படைத்துள்ளது. அப்புறம் என்ன ரசிகர்களே கொண்டாடட்டத்துக்கு தயாரா?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.