Kannamma
Kannamma

நடந்து நடந்து கடைசியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் கண்ணம்மா. இதுகுறித்த மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kannamma in Bigg Boss Home : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் ரோஷினி என்பவர் நாயகியாக நடித்து வருகிறார். கடந்த வாரத்தில் இவர் தன்னுடைய கணவர் பாரதியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி தற்போது வரை நடந்து கொண்டே இருக்கிறார்.

இதுகுறித்து மீம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டே இருந்த கண்ணம்மா தற்போது கமல்ஹாசன் தயவால் பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் தஞ்சம் அடைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த மீம்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதுபோன்ற மீம்ஸ் புகைப்படங்களால் பாரதிகண்ணம்மா சீரியல் இதனை எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.