
சீரியல் நடிகர் நவீன், கண்மணி தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன்.

இவர் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கண்மணி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் வளைகாப்பு நடந்தது அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கண்மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகளின் கையைப் பிடித்துக் கொண்டு நவீன் இருக்கும் புகைப்படத்தை கண்மணி வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் குட்டி பட்டு பிறந்தாச்சு எனது பதிவு செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் நவீன், கண்மணிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.