பாரதி கண்ணம்மா சீரியலால் நிறைய வாய்ப்புகளை இழந்தேன் அதனால்தான் சீரியலில் இருந்து வெளியேறினேன் என கண்மணி கூறியுள்ளார்.

Kanmani Manohar About Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதலில் இந்த சீரியலில் அகிலன் வேடத்தில் நடித்து வந்தவர் மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து வெளியேறினார்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து சமீபத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நாயகியாக ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் கண்மணி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்போது நான் பாரதிகண்ணம்மா சீரியல் ஐ மிஸ் செய்கிறேன். காரணம் எனக்கு முதல் முதலாக கிடைத்த வாய்ப்பு இதுதான். என்னை மக்களிடம் கொண்டு சேர்த்த சீரியல்.

இருந்தாலும் இந்த சீரியலை நான் நிறைய வாய்ப்புகளை இழந்தேன். இதனால்தான் வேறு சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.