Kanimozhi contest Lok Sabha elections
Kanimozhi contest Lok Sabha elections

Kanimozhi contest Lok Sabha elections – சென்னை: லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட முடிவு செய்துள்ள எம்.பி கனிமொழி, அதற்காக இன்று விருப்பமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், திமுக வரும் தேர்தலில் போட்டியிட தீவிர கூட்டணி ஆலோசனை செய்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தங்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது திமுக.

இதற்கான விருப்பமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு எடுத்து இருக்கிறார் சில தரப்பு தெரிவித்துள்ளது.

எனவே எம்.பி கனிமொழி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இவர் தனது தொண்டர்களுடன் சென்று விருப்பமனு அளிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here