திரையரங்குகளில் கங்குவா ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்,ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் , உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்
மேலும் திஷா பதானி, யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, போன்ற பல பிரபலங்களிலிருந்து நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எக்கச்சக்கமாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதில், இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கொங்குவா ட்ரைலர் திரையிடப்படும் என்ற தகவலை படக்குழு அறிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது.