கங்குவா படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
திஷா பதானி ,யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ,கோவை சரளா, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் படக்குழு காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டிரெய்லர்ரை வெளியிட்டு உள்ளது. இதை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இந்த டிரெய்லர் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.