கங்குவா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும்,ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிரெய்லர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.
அந்த வகையில் இந்த படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக சூர்யா இந்தப் படத்தில் ஏழு வேடங்களில் நடிக்கிறார் என்பதும், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படம் கங்குவா என்பதும் குறிப்பிடத்தக்கது.