கங்குவா படைத்த சாதனை குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ,கோவை சரளா, திஷா பதானி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான அந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை பெற்றுள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே 16 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற சாதனையை கங்குவா டிரெய்லர் பெற்றுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு வரை சூரரைப்போற்று பட ட்ரெய்லர் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.