நடிகர் சூர்யாவின் உடற்பயிற்சி வீடியோவை கங்குவா படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் கங்குவா கெட்டப்பில் பயங்கரமாக உடற்பயிற்சி செய்யும் சூர்யாவின் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து ஆர்வத்தை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.