கங்குவா ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி,யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் அக்டோபர் பத்தாம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதே நாளில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது கங்குவா படத்தை அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதத்திலேயே கங்குவா வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.