கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
மேலும் திஷா பதானி, சூர்யா,யோகி பாபு, பாபி தியோல், ஜெகபதி பாபு,நடராஜன் சுப்ரமணியன், கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.
ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது. இந்த தகவலை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் சொல்லியிருந்தார்.
அந்த வகையில் தற்போது கங்குவா நவம்பர் இரண்டாம் தேதி வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.