ஒரே நாளில் வெளியாகும் கங்குவா ,வேட்டையன் படங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
த. செ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இது மட்டும் இல்லாமல் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படமும் அக்டோபர் 10 தேதி வெளியாக உள்ளது. பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது.
எனவே ஒரே நேரத்தில் நேரடியாக மோதிக் கொள்ளும் இரண்டு படங்களில் ஜெயிக்கப் போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.இது மட்டும் இல்லாமல் நீங்கள் எந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.