12 மணி நேரத்தில் கங்குவா மோஷன் போஸ்டர் படைத்த சாதனை குறித்து படக்குழு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சரித்திர படமாக தயாராகி வரும் இப்படம் 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிக வரவேற்பை பெற்று வரும் இப்போஸ்டர் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் பதிவின் மூலம் அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.