நடிகை கங்கனா ரணாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் சந்திரமுகி 2 திரைப்படம் குறித்து ஸ்பெஷல் அப்டேட்டை பகிர்ந்திருக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மனோ பாலா, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட்டை நடிகை கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், காலா மாஸ்டர் ஜியுடன் ‘சந்திரமுகி 2’ படத்திற்கான க்ளைமாக்ஸ் பாடல் ஒத்திகை தொடங்கியது. இப்பாடலை கோல்டன் குளோப் வெற்றியாளர் ஸ்ரீ எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தை புகழ்பெற்ற ஸ்ரீ பி.வாசு ஜி இயக்கி வருகிறார். இதில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என குறிப்பிட்டு புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார்.