kangana ranaut
kangana ranaut

Kangana Ranaut : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.

இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

டாப்சீயா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை ஹோம் வர்க் செய்ய கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

இந்த காலக்கட்டத்தில் வேறெந்த படத்திலும் நடிக்காமல் வெளியில் கூட தலைக்காட்டாமல் இருக்க கங்கனா முடிவு செய்துள்ளாராம். மேலும் சொந்த குரலில் டப்பிங் பேசுவதற்காக தமிழும் கற்று வருகிறாராம்.

இதுபோக இந்த படத்துக்காக பரதநாட்டியமும் பயில கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.
கங்கனா ரனாவத் நடிப்பில் அண்மையில் மணிகர்னிகா படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.