kangana
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக மாற நடிகை கங்கனா ரணாவத் மேக்கப் போடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Kangana ranaut jayalalitha makeup for thalaivi movie – மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘தலைவி’ திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுஞ்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. இதில் ஜெ.வின் இளமைக்காலம் முதல் முதுமை வரை மொத்தம் 4 விதமான தோற்றங்களா கங்கனா நடிக்கவுள்ளார்.

ஜெயலலிதா படத்துக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கும் கங்கனா – என்ன தெரியுமா?

எனவே, கங்கனாவுக்கான மேக்கப் அமெரிக்க ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் கவனித்து வருகிறார். இவர் கேப்டன் மார்வெல் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர். இதற்காக கங்கனா அமெரிக்கா சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்களை கங்கனாவின் டீம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.