உதவி இயக்குனரை அறைந்து உள்ளார் நவீன்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

உதவி இயக்குனரை அறைந்த நவீன்.. சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு - நடந்தது என்ன??

இந்த சீரியலில் நவீன் மட்டுமல்லாமல் அருண் என்ற ஹீரோவும் நடித்து வருகிறார். சமீபத்தில் சீரியல் ஷூட்டிங் சென்னையில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்போது மதிய உணவு இடைவேளை முடிந்து ஷூட்டிங் தொடங்க நவீன் அவருடைய ரூமில் இருந்து வராததால் குலசேகரன் என்ற உதவி இயக்குனர் அவரை அழைக்கச் செல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் நவீன் குலசேகரனை அறைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் குலசேகரின் கண்ணிற்கு கீழே ரத்தம் வர அவர் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் போலீசிலும் புகார் அளிக்க இரண்டு தரப்பிலும் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு பாதியில் சூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

உதவி இயக்குனரை அறைந்த நவீன்.. சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு - நடந்தது என்ன??

இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாகவே நவீன் நடிக்க பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தான் இவருக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகருக்கும் திருமணம் நடந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.