Kanchi varadaraja Perumal : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News ஆன்மிகம் அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

Kanchi varadaraja Perumal :

☆ அருள்மிகு வரதராஜபெருமாள் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது காஞ்சிபுரம் திருக்கோவில் தான்.

புண்ணியம் நிறைந்த திருக்கோவிலில் நீருக்கு அடியில் குடிகொண்டு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருகிறார் அத்திவரதர் என்னும் அருள்மிகு வரதராஜ சுவாமி. அவர் ஜூலை மாதத்தில் காட்சி தருகிறார் (2019). அது பற்றிய சிறப்பு தகவல்களை அறிந்து கொள்வோம்.

☆ நீருக்கு அடியில் நாராயணர் தொண்டை நாட்டின் திலகமாகவும், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

திருக்கச்சி என்றும், அத்திகிரி என்றும், புராணங்களில் போற்றப்படும் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் நீருக்கு அடியில் குடிகொண்டு அருள் செய்கிறார். அத்திமர திருமேனியான அருள்மிகு அத்திவரதர் சுவாமி.

தளபதி 63-க்காக அட்லீ வைத்த கோரிக்கை – ஓகே சொல்வாரா விஜய்?

☆ நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப்பெருமாள் என்றாலும், உண்மையில் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர் என்று கூறப்படுகிறது.

அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன் 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம். 2019 ஜூலை முதல் வாரத்தில் அவர் காட்சி தர உள்ளார். அவரை தரிசிக்கும் பாக்கியத்தை பெறுவது பூர்வஜென்ம புண்ணியம் என்று தான் கூற வேண்டும்.

☆ எங்கே குடிகொண்டுள்ளார்:

திருக்கோவிலின் ராஜகோபுரத்தைக் கடந்ததும் இடப்புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கிலுள்ள ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் வெள்ளித்திரையில் சயனகோலத்தில் குடிகொண்டுள்ளார்.

☆ எந்தக் காலத்திலும் இந்த திருக்குளம் வற்றாது நிறைந்துள்ளது. நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு சுவாமி ஆலயத்திற்கு எடுத்து வந்து 48 நாட்கள் வழிபாடு செய்யப்பட்டு, மீண்டும் குளத்திலேயே வைக்கப்படும்.

அதில் அருள்மிகு அத்திவரதர் சில நாட்கள் சயன கோலத்திலும், சில நாட்கள் நின்ற கோலத்திலும், காட்சி தந்து அருள்வார். பாரதத்தின் அனைத்து மக்களும் தரிசிக்க காத்திருக்கும் அருள்மிகு அத்திவரதர் எழுந்தருள சில நாட்களே உள்ளன.

எல்லோரும் தரிசிப்போம்! இறையருள் பெறுவோம்!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here