Kanchi Kamatchi : It is a real truth that all your demands will be fulfilled now, Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News,

Kanchi Kamatchi :

▪ ஆறுவார வழிபாடு” என்பது ‘ஆறு முழுமையான வாரங்கள்’ நமது கோரிக்கையை வைத்து அம்மனை வழிபடுவதாகும்.

▪ முதல் வாரம் கோவிலுக்கு செல்லும் போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை பாக்குடன் இரண்டு எலுமிச்சையும் சேர்த்து வாங்கிச் சென்று,

மனமுருகிப் பிரார்த்தித்து சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அர்ச்சகரிடம் கொடுத்து முதல் வாரம் என்று கூற அவர் ஒரு எலுமிச்சையை மீண்டும் தருவார்.

▪அதைக் கொண்டு வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த வாரம் செல்கையில்  பூஜித்த பழைய எலுமிச்சையும் சேர்த்துக் கொண்டு புதிய எலுமிச்சை ஒன்றையும் வாங்கி கொண்டு அம்மனை தரிசிக்க வேண்டும்.

▪ இம்முறையும் காமாட்சி அம்மன் சன்னதியில் ஒரு எலுமிச்சையைப் பெற்று வந்து இரண்டாவது வார விரத வழிபாட்டை வீட்டிலேயே அனுஷ்டிக்க வேண்டும்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதோ சில டிப்ஸ்!..

▪ இது போன்றே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது வாரமும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ காமாட்சியைத் தொழுது எலுமிச்சை பழையது+புதியது இரண்டையும் கொடுத்து சன்னதியில் தரும் எலுமிச்சையைக் கொண்டு வந்து வீட்டில் பூஜிக்க வேண்டும்.

▪ ஆறாவது வார விரத வழிபாட்டை வீட்டில் முடித்தவுடன் ஏழாவது முறையாக ஆலயத்திற்குச் சென்று ஆறுவார வழிபாட்டினை முறையாக முடிக்க வேண்டும்.

▪ஏழாவது வாரம் விரதம் முடிந்த பின் வீட்டிலேயே தயார் செய்த பாலுடன் ஏலக்காய், கல்கண்டு, தேன், பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

▪ இப்பொழுது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது கண்கூடான உண்மையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here