TRP ரேட்டிங்கில் தளபதி விஜயின் தூக்கி சாப்பிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Kanchana3 Vs Ghilli TRP Rating : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் வெள்ளித்திரையில் வெளியாகும் போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெறும்.

அதேசமயம் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் TRP-யில் பெரும் சாதனை படைக்கும். தற்போது வரை தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் காஞ்சனா3 மற்றும் கில்லி ஆகியவை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப் பட்டுள்ளன.

இதில் காஞ்சனா3 திரைப்படம் TRP-ல் 1.28 கோடி பார்வையாளர்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக தளபதி விஜயின் கில்லி திரைப்படம் 94.96 லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என BARC நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 வருடத்திற்கு முன்பாக வெளியான கில்லி திரைப்படம் தற்போதும் கிட்டத்தட்ட ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கி இருப்பதே மிகப் பெரிய சாதனை தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.