Kanchana Hindi Remake
Kanchana Hindi Remake

Kanchana Hindi Remake – ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காஞ்சனா முதல் பாகம் இந்தியில் லக்‌ஷ்மி பாம்ப் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்றும் இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடித்து வருவதாகவும் நாம் கூறியிருந்தோம்.

மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் பாடல் காட்சியுடன் துவங்கியிருப்பதாகவும் கூறியிருந்தோம். இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பில் முதல்முறையாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகை கியாரா அத்வானி படத்தின் கிளாப் போர்டை எ=கையில் பிடித்தபடி போஸ் கொடுக்கும் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Kanchana Hindi Remake
Kanchana Hindi Remake