Kanchana 3
Kanchana 3

Kanchana 3 : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காஞ்சனா முதல் பாகம் இந்தியில் லக்‌ஷ்மி எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.

மும்பையில் பூஜையுடன் தொடங்கிய தர்பார் – இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.!

இன்று இதன் படப்பிடிப்பு மும்பையில் பாடல் காட்சியுடன் துவங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

காஞ்சனா 3-ம் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இதன் நான்காம் பாகம் 100 கோடி பொருட்செலவில் 3டி-யில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.